மஹாராஷ்டிரத்தில் இண்டியா கூட்டணி உறுதியானது!

கூட்டணி கட்சிகளின் தொகுதி உடன்பாட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
மஹாராஷ்டிரத்தில் இண்டியா கூட்டணி உறுதியானது!
மஹாராஷ்டிரத்தில் இண்டியா கூட்டணி உறுதியானது!ANI

மஹாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணி தொகுதி பங்கீடு உறுதியாகி உள்ளது.

ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

மஹாராஷ்டிரத்தில் கூட்டணி கட்சிகளின் தொகுதி உடன்பாட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணி தொகுதி பங்கீடு இன்று உறுதியாகி உள்ளது.

இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மஹாராஷ்டிரத்தை பொறுத்தவரை காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

மஹாராஷ்டிரத்தில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ளன. இதில், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சிக்கு 21 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் பிரிவுக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in