
கும்பமேளாவுக்கு 40 கோடி பேர் வருகை தருவார்கள் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கணித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற கருத்தரங்குக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், கும்பமேளா மூலம் ரூ. 2 லட்சம் கோடி அளவுக்குப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றும் அவர் கணித்துள்ளார்.
"2019-ல் உத்தரப் பிரதேசத்தில் ரூ. 1.2 லட்சம் கோடி அளவிலான பொருளாதாரத்தில் கும்பமேளா பங்களிப்பு செய்தது. 2024-ல் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 16 கோடி பக்தர்கள் வருகை தந்தார்கள். அயோத்தியாவில் ஜனவரி முதல் செப்டம்பர் வரை 13.55 கோடி பக்தர்கள் வருகை தந்தார்கள். ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை கும்பமேளா நடைபெறவிருக்கிறது. இது நாட்டின் தொன்மையான கலாசாரம் மற்றும் மதம் சார்ந்த மரபுகளை உலகளவுக்கு எடுத்துச் செல்லும். கும்பமேளா என்பது வெறும் சார்ந்து கூடும் நிகழ்வு மட்டுமல்ல. சமூக மற்றும் ஆன்மிக ஒற்றுமைக்கான அடையாளம்" என்றார் யோகி ஆதித்யநாத்.