
குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 பயணிகள் விமானம் இன்று (ஜூன் 12) விபத்துக்குள்ளானது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 3 நிமிடங்களில் விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் 242 பயணிகள் இருந்தார்கள்.
ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது மோதியதால், பலத்த சேதமும் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 169 இந்தியர்களுடன், 53 பிரிட்டன், 7 போர்த்துகீஸ், கனடாவைச் சேர்ந்த ஒருவர் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.
விமான விபத்து குறித்து விசாரணைத் தொடங்க விமான விபத்து புலனாய்வுப் பிரிவு சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்துள்ளது.
விபத்து குறித்து ஏர் இந்தியா அளித்துள்ள அவசர கால உதவி எண்: 1800 5691 444
விபத்து குறித்து பிரிட்டன் அரசு அளித்துள்ள உதவி எண்: 020 7008 5000
டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது குறித்து, அந்நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த விமான விபத்தால் அஹமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட பலரும் விமான விபத்துக்கு குறித்து தங்களுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.