இரண்டாம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 60.7% வாக்குப்பதிவு

அதிகபட்சமாக திரிபுராவில் 77.53% வாக்குகளும், குறைந்தபட்சமாக 52.74% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இரண்டாம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 60.7%  வாக்குப்பதிவு
ANI

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 60.7% வாக்குகள் பதிவாகியுள்ளன.

கேரளத்தில் 20 தொகுதிகள், கர்நாடகத்தில் 14 தொகுதிகள் உள்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திரிபுராவில் 77.53% வாக்குகளும், குறைந்தபட்சமாக 52.74% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மணிப்பூர் (76.06%), மேற்கு வங்கம் (71.84%), சத்தீஸ்கர் (72.13%), அஸ்ஸாம் (70.66%) ஆகிய மாநிலங்களில் அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன. மஹாராஷ்டிரம் (53.51%), பிஹார் (53.03%), மத்தியப் பிரதேசம் (54.83%), ராஜஸ்தான் (59.19%) ஆகிய மாநிலங்களில் குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

13 மாநிலங்களில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in