கடைசிக்கட்டத் தேர்தல்: 11 மணி நிலவரப்படி ஹிமாச்சலில் அதிக வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மாலை 6.30 மணி முதல் தேர்தலுக்குப் பிந்தையக் கருத்து கணிப்புகள் வெளியாகவுள்ளன.
கடைசிக்கட்டத் தேர்தல்: 11 மணி நிலவரப்படி ஹிமாச்சலில் அதிக வாக்குப்பதிவு
ANI

மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு காலை 11 மணி நிலவரப்படி மொத்தம் 26.3% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் ஏழாவது கட்டத்தில்தான் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஒடிஷாவில் கடைசி கட்டமாக 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஹிமாச்சல் பிரதேசத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இருந்தவை. இந்த 6 எம்எல்ஏ-க்களும் மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்தார்கள். எனவே, இந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவு ஹிமாச்சலில் காங்கிரஸின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவுள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் 31.92% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக 26.30% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஒடிஷா சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 22.97% வாக்குகள் பதிவாகியுள்ளன.

  • ஜார்க்கண்ட் - 29.55%

  • மேற்கு வங்கம் - 28.1%

  • உத்தரப் பிரதேசம் - 28.02%

  • சண்டிகர் - 25.03%

  • பிஹார் - 23.91%

  • ஒடிஷா - 22.64

  • ஹிமாச்சலப் பிரதேசம் - 31.92%

ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மாலை 6.30 மணி முதல் தேர்தலுக்குப் பிந்தையக் கருத்து கணிப்புகள் வெளியாகவுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in