

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பெகுசாராயில் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து குளத்தில் மீன் பிடித்தார்.
பிஹாரில் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பிஹாரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
"பெரிய மார்பைக் கொண்டிருப்பதால் மட்டும் நீங்கள் வலிமையானவராக ஆகிவிட முடியாது. 56 இன்ச் மார்பளவைக் கொண்ட பிரதமர் மோடிக்கு ஆபரேஷன் சிந்தூரின்போது டிரம்ப் அழைத்தபோது, பீதியடைந்துவிட்டார். பாகிஸ்தானுடனான ராணுவச் சண்டை இரு நாள்களில் முடிந்துவிட்டது.
1971-ல் அமெரிக்காவால் இந்தியா அச்சுறுத்தப்பட்டது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பயப்படாமல் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடித்தார். ஆனால், ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துமாறு டிரம்ப் கூறியவுடன் மோடி அதை நிறுத்திவிட்டார்.
டிரம்பைப் பார்த்து மட்டும் மோடிக்குப் பயம் கிடையாது. அம்பானி மற்றும் அதானியால் தான் அவர் இயக்கப்படுகிறார். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற மோடி அரசின் அனைத்து முக்கிய நடவடிக்கைகளும் சிறு தொழில்களை அழித்து பெரு முதலாளிகளுக்குப் பலன் தரும் நோக்கம் கொண்டவை" என்றார் ராகுல் காந்தி.
மேலும், பெகுசாராயில் குளத்தில் குதித்து மீனவர்களுடன் இணைந்து அப்பகுதி மக்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டார். விகாஷீல் இன்சான் கட்சித் தலைவரும் கூட்டணியின் துணை முதல்வர் வேட்பாளருமான முகேஷ் சஹானி உடனிருந்தார். இவர் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். காங்கிரஸ் தலைவர் கண்ணையா குமாரும் இருந்தார். பெகுசாராய், கண்ணையா குமாரின் சொந்த ஊர். அவரும் குளத்தில் குதித்து வலையை மேல் நோக்கி இழுத்தார்.
Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi jumped into a pond and participated in a traditional process of catching fish in Begusarai. VIP chief and Mahagathbandhan's Deputy CM face, Mukesh Sahani, Congress leader Kanhaiya Kumar, and others also present.
Rahul Gandhi | Bihar Election | Fishing | Rahul Gandhi Fishing