மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அஹமதாபாதிலுள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் நாளை வாக்களிக்கிறார்.
இந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் 25 தொகுதிகளுக்கு மே 7-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சூரத்தில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மற்ற வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகுவதாகக் கூறி வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார்கள். எனவே, பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் மக்களவைக்குப் போட்டியின்றித் தேர்வாகியுள்ளார்.
2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் குஜராத்தில் உள்ள அனைத்தும் 26 இடங்களையும் பாஜக கைப்பற்றியது. இந்த முறை 26 இடங்களில் 24 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பாவ்நகர் மறஅறும் பரூச் தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.