மணிப்பூரில் 6 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு 11 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் 6 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

வெளி மணிப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் 6 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 30-ல் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மணிப்பூரில் ஏப்ரல் 19-ல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவின்போது ஒரு சில வாக்குச் சாவடிகளில் வன்முறை வெடித்ததால், 11 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 22-ல் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 26-ல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் உக்ருல், சிங்கை மற்றும் கரோங் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட சில வாக்குச்சாவடிகளில் வாக்கு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. தேர்தல் முடிவுகளைக் கண்டறிய முடியாத அளவுக்கு வாக்கு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, 11 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 30 காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in