காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எப்போது வெளியீடு?: கே.சி. வேணுகோபால் தகவல்

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாதில் பேரணிகள் நடைபெறுகின்றன.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்படம்: https://twitter.com/INCIndia

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 5-ல் வெளியிடப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"நாடு முழுக்க மக்களுடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகு, காங்கிரஸ் கட்சி ஏப்ரல் 5-ல் கட்சித் தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 6-ல் ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாதில் இரு மெகா பேரணிகள் நடைபெறவுள்ளன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஜெய்ப்பூரில் நடைபெறும் பேரணியில் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.

ராகுல் காந்தி ஹைதராபாதில் நடைபெறும் பேரணியிலும் கலந்துகொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுக்க 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in