இந்திய நிலவரம் நேரலை: பாஜக அலுவலகத்தில் மோடி உரை!

பாஜக கூட்டணி 290 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய நிலவரம் நேரலை: பாஜக அலுவலகத்தில் மோடி உரை!

ஜிஎஸ்டி, வங்கித்துறைகளில் சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம் - பிரதமர் மோடி

பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி உரை

டெல்லி, இமாச்சல், குஜராத் மக்கள் நம்மை முழுவதுமாக ஆதரித்திருக்கிறார்கள்.

மோடியின் மீதும் மோடியின் திட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.

கேரள மக்கள் மனதை நாம் வென்றிருக்கிறோம் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி தில்லி பாஜக அலுவலகத்தில் உரை

தேசிய ஜனநாயக கூட்டணியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்

தேர்தல் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி

பாஜக தொண்டர்களால் மூன்றாவது முறையாக வெற்றி கிடைத்துள்ளது: அமித்ஷா

பிரதமர் மோடி பாஜக அலுவலகம் வருகை!

பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி பாஜக அலுவலகம் வருகை.

அயோத்தி ராமர் கோவிலை உள்ளடக்கிய ஃபைஸாபாத் தொகுதியில் 50000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சமாஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத்!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது

இந்திய வரலாற்றில் இது ஒரு புதிய மைல்கல்: பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு.

இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள இந்த அன்புக்கு நான் தலைவணங்குகிறேன்.

இந்திய வரலாற்றில் இது ஒரு புதிய மைல்கல். புதிய ஆற்றல், புதிய உத்வேகம், புதிய தீர்மானங்களுடன் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முன்னேறிச் செல்வோம் என நான் உறுதியளிக்கிறேன்.

ஓய்வில்லாமல் உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்

காந்திநகரில் அமித்ஷா வெற்றி!

7.4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அமித்ஷா

தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் !

பாலியல் புகாரில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி 

கர்நாடகாவின் ஹசன் தொகுதியில் மஜத வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்: மமதா பானர்ஜி

பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை, மக்களின் நம்பிக்கையை இழந்ததால் பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்

இண்டியா கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம் என மமதா பானர்ஜி பேச்சு

எந்தத் தொகுதியை ராஜினாமா செய்வது என முடிவு செய்யவில்லை: ராகுல் காந்தி

"வயநாடு, ராய் பரேலி தொகுதி மக்களின் அன்புக்கு நன்றி. இரண்டில் எந்த தொகுதியை ராஜினாமா செய்வது என்று முடிவெடுக்கவில்லை. அனைத்து மாநில மக்களுக்கும் நன்றி. ஆனால், உத்தரப் பிரதேச மக்களுக்குத் தனிப்பட்ட வகையில் இண்டியா கூட்டணியின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவுடன் ஆட்சியமைப்பா?

"இண்டியா கூட்டணித் தலைவர்களுடன் நாளை ஆலோசனை நடைபெறவுள்ளது. அவர்களிடம் இது குறித்து விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். கூட்டணிக் கட்சியினரை மதிக்கிறோம். எனவே, அவர்களுடையக் கருத்தைக் கேட்காமல் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க மாட்டோம்" - ராகுல் காந்தி.

"மோடியும் அமித்ஷாவும் இந்த நாட்டை நிர்வகிப்பதை மக்கள் விரும்பவில்லை. மக்களின் இந்த தீர்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்டத்தைக் காப்பாற்றியிருக்கிறது. இண்டியா கூட்டணி ஆட்சியமைப்பது குறித்து எங்கள் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து முடிவெடுப்போம். இந்த நாட்டின் விவசாயிகள், ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியலமைப்புச் சட்டத்தை காப்பற்றியிருக்கார்கள்." - ராகுல் காந்தி.

"பாஜக கட்சி மட்டுமல்லாமல் அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவர்களையும் எதிர்த்து வெற்றி நாங்கள் பெற்றுள்ளோம்." - ராகுல் காந்தி.

"மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் என மக்கள் கவலை கொண்டனர்" - கார்கே.

காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு

"இது மோடிக்கும் மக்களுக்கும் நடக்கும் போட்டி என நாங்கள் முன்பே கூறினோம். மக்கள் இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை, பாரத் ஜோடோ நியாய யாத்திரை மூலம் கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்தார். மக்களின் இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்." - காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வருகை.

பிரதமர் மோடி வெற்றி!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசியில் வெற்றி பெற்றுள்ளார்.

க்யூசுப் பதான் வெற்றி!

மேற்கு வங்க மாநிலம் பெஹ்ராம்பூர் தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், திரிணமூல் வேட்பாளருமான யூசுப் பதான் வெற்றி. மக்களவைக்கான காங்கிரஸ் தலைவரும், 5 முறை எம்.பி.யுமான அதீர் ரஞ்சன் சௌதரி தோல்வியடைந்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தைச் சந்தித்த காங்கிரஸ்!

வாக்கு எண்ணிக்கையைத் தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் புகார் எழுப்பியதைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான காங்கிரஸ் குழு தேர்தல் ஆணையத்தைச் சந்தித்தது.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது:

"பிற்பகல் 2.30 மணிக்குப் பிறகு, தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் முடிவுகள் பதிவேற்றம் செய்யப்படுவதில் தாமதம் இருப்பதாக மாநிலப் பிரிவுகள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து தகவல் வந்துள்ளது. நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என்பது இரண்டாவது புகார். நாங்கள் எதுவும் குற்றம்சாட்டவில்லை. தகவல்களைப் பகிர வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டுள்ளோம். எங்களுடையக் கருத்தைத் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. எந்தவொரு தகவலையும் பதிவேற்றம் செய்வதில் தாமதிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டது" என்றார் அபிஷேக் மனு சிங்வி.

ரே பரலியில் ராகுல் வெற்றி!

உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரலியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிப்பு. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

4 மணி நிலவரம்:

வாக்கு எண்ணிக்கையில் தாமதம்?

உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹாரில் வாக்கு எண்ணிக்கையைத் தாமதப்படுத்துவதாகவும், இது முற்றிலும் வழக்கத்துக்கு மாறானது என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.

அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான காங்கிரஸ் குழு இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் ஆணையத்தைச் சந்திக்கவுள்ளது.

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இல்லத்துக்கு விரையும் மத்திய அமைச்சர்கள்

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஜெ.பி. நட்டாவின் இல்லத்துக்குச் சென்றுள்ளார்கள்.

அயோத்தியில் பாஜக தொடர்ந்து பின்னடைவு

ராமர் கோயில் கட்டப்பட்ட அயோத்தி நகரைக் கொண்ட ஃபைஸாபாத் தொகுதியில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக பின்னடைவு. பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை விடவும் சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை.

"யாரிடமும் பேசவில்லை"

சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமாரிடம் சரத் பவார் பேசியதாகத் தகவல் வெளியான நிலையில், தான் இதுவரை யாரிடமும் பேசவில்லை என அவர் மறுத்துள்ளார்.

காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி

திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் வெற்றி!

3 மணி நிலவரம்:

சசிதரூர் வெற்றி!

திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான சசிதரூர் 15000 வாக்கு வித்தியாசத்தில் பாஜக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரைத் தோற்கடித்தார்.

சந்திரபாபு நாயுடுவுடன் இண்டியா கூட்டணி பேச்சு?

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், இண்டியா கூட்டணியிலுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆந்திரப் பிரதேசத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவை அழைத்துப் பேசியுள்ளதாகத் தகவல்.

பாஜக 272 இடங்களுக்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடுவின் தேவை அதிகம். இந்தச் சூழலில் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு சென்றுள்ளதாகத் தகவல்.

சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ல் ஆந்திர முதல்வராகப் பதவியேற்பு!

சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ல் ஆந்திர முதல்வராகப் பதவியேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் - கடூர் சாஹிப் மக்களவைத் தொகுதி

சுயேட்சையாகப் போட்டியிட்ட, சிறையில் உள்ள 31 வயது காலிஸ்தான் ஆதரவு மதபோதகர் அம்ரித்பால் சிங் 1,20,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

அயோத்தியில் பாஜக தொடர்ந்து பின்னடைவு

உத்தரப் பிரதேசத்தில் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைஸாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

சமாஜ்வாதி - பாஜக வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 3,186. நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 2,922.

கேரளத்தில் கால் பதித்த பாஜக!

திரிச்சூரில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி 71 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்குப் பின்னடைவு

திரிணமூல் காங்கிரஸ் - 31 இடங்களில் முன்னிலை

பாஜக - 10 இடங்களில் முன்னிலை

காங்கிரஸ் - 1 இடத்தில் முன்னிலை

கடந்த முறை 18 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பின்னடைவு

90-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து முன்னிலை 

யூசுப் பதான் முன்னிலை

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் யூசுப் பதான் முன்னிலை

12 மணி நிலவரம்:

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 295 இடங்களில் முன்னிலை

இண்டியா கூட்டணி - 229 இடங்களில் முன்னிலை

மற்றவை - 19 இடங்களில் முன்னிலை

வாரணாசி தொகுதியில் மோடி முன்னிலை

72000 வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடி முன்னிலை

தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

கேரளத்தில் திருச்சூர், திருவனந்தபுரம் தொகுதிகளில் பாஜக முன்னிலை

திருச்சூர் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி, திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை

உ.பி.யில் தொடர்ந்து பாஜக பின்னடைவு

காங்கிரஸ் + 43

பாஜக + 36

பிற 1

தெலங்கானாவில் நெருக்கடி!

பாஜக மற்றும் காங்கிரஸ் தலா 8 இடங்களில் முன்னிலை

ஹைதராபாதில் அசாதுதீன் ஒவைசி முன்னிலை!

11 மணி நிலவரம்:

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 291 இடங்களில் முன்னிலை

காங்கிரஸ் - 224 இடங்களில் முன்னிலை

மற்றவை - 28 இடங்களில் முன்னிலை

உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணி முன்னிலை

உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் இண்டியா கூட்டணி 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பாஜக 35 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் இரு இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

சமாஜவாதி 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 62 இடங்களில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் 10 இடங்களில் வெற்றி பெற்றது. சமாஜவாதி 5 இடங்களில் வெற்றி பெற்றது. அப்னா தளம் 2 இடங்களில் வெற்றி பெற்றது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி உத்தரப் பிரதேசத்தில் பாஜக மட்டும் 65 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 69 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.

ஆந்திரத்தில் பாஜக கூட்டணி முன்னிலை

பாஜக கூட்டணி - 20 இடங்களில் முன்னிலை

காங்கிரஸ் கூட்டணி - 0

மற்றவை - 5

ஒடிஷா சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம்

பாஜக - 57 இடங்களில் முன்னிலை

பிஜூ ஜனதா தளம் - 38 இடங்களில் முன்னிலை

காங்கிரஸ் - 10 இடங்களில் முன்னிலை

சிபிஐ(எம்) - 1 இடத்தில் முன்னிலை

ஐஎன்டி - 1 இடத்தில் முன்னிலை

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல்நிலவரம்

தெலுங்கு தேசம் - 116 இடங்களில் முன்னிலை

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 23 இடங்களில் முன்னிலை

ஜனசேனா - 15 இடங்களில் முன்னிலை

பாஜக - 6 இடங்களில் முன்னிலை

தில்லியில் பாஜக முன்னிலை!

பாஜக - 6 இடங்களில் முன்னிலை

இண்டியா கூட்டணி - 1 இடத்தில் முன்னிலை

பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் காட்டிலும் பாஜக குறைவான இடங்களில் முன்னிலை

பாஜக கட்சி - 252 இடங்களில் முன்னிலை

காங்கிரஸ் - 98 இடங்களில் முன்னிலை

பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை!

கர்நாடகத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா 1,446 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

வாரணாசியில் பிரதமர் மோடி 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ஸ்மிருதி இரானிக்குப் பின்னடைவு

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் 10,423 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி பின்னடைவு.

காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் முன்னிலை வகிக்கிறார்.

பிரதமர் மோடி முன்னிலை!

வாரணாசியில் ஆரம்பச் சுற்றுகளில் பின்தங்கியிருந்த பிரதமர் மோடி, தற்போது 436 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

ராகுல் காந்தி முன்னிலை

வயநாடு, ராய் பரேலி தொகுதிகளில் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை

இந்தியப் பங்குச் சந்தை கடும் சரிவு 

வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் காரணமாக இந்தியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 2087 புள்ளிகளும் நிஃப்டி 653 புள்ளிகளும் குறைந்துள்ளன.

வாரணாசியில் பிரதமர் மோடி தொடர்ந்து பின்னடைவு. 5,000 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.

வயநாடு, ரே பரலியில் ராகுல் காந்தி முன்னிலை!

வயநாட்டில் ராகுல் காந்தி 21,836 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

ரே பரலியில் ராகுல் காந்தி 8,993 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

வாரணாசியில் பிரதமர் மோடிக்குப் பின்னடைவு

பிரதமர் மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 6 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்குப் பின்னடைவு

பாஜக - 22

திரிணமூல் - 17

கர்நாடகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 21

காங்கிரஸ் - 6

இண்டியா கூட்டணி 200 இடங்களில் முன்னிலை!

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 278

இண்டியா கூட்டணி - 203

உத்தரப் பிரதேச நிலவரம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 36

இண்டியா கூட்டணி - 31

மஹாராஷ்டிரத்தில் இண்டியா கூட்டணி முன்னிலை

இண்டியா கூட்டணி - 25

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 18

மற்றவை - 0

9 மணி நிலவரம்

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 279

இண்டியா கூட்டணி - 181

மற்றவை - 17

தேர்தல் ஆணையத் தரவுகளின்படி முதல் சுற்று நிலவரம்

காலை 8.47 மணி நிலவரப்படி பாஜக முன்னிலை

பாஜக - 42

காங்கிரஸ் - 17

ஆம் ஆத்மி - 4

சமாஜவாதி - 2

தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை

361/543

தேசிய ஜனநாயகக் கூட்டணி - 214

இண்டியா கூட்டணி - 141

மற்றவை - 10

பிரதமர் மோடி முன்னிலை

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி பாஜக முன்னிலை!

முன்னிலை நிலவரம்!

பாஜக - 4 இடங்களில் முன்னிலை

நாகா மக்கள் முன்னணி - 1 இடத்தில் முன்னிலை

ஸோரம் மக்கள் இயக்கம் - 1 இடத்தில் முன்னிலை

ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி - 1 இடத்தில் முன்னிலை

ரே பரலியில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் ரே பரலி தொகுதியில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் எனத் தகவல்..

வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு முதல் வெற்றி

சூரத்தில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் ஏற்கெனவே போட்டியின்றித் தேர்வானார்.

தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது!

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தபால் வாக்குகள்

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்துக்குள் செல்ஃபோன், லேப்-டாப் உள்ளிட்ட சாதனங்களை எடுத்துச் செல்லத் தடை

இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை..

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து, 8.30 மணி முதல் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

logo
Kizhakku News
kizhakkunews.in