தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்: தமிழ்நாடு முடிவு என்ன?

திமுக தலைமையிலான இண்டியா கூட்டணிக்குத் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்கள் கிடைக்கும் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்: தமிழ்நாடு முடிவு என்ன?
ANI

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு  நிலவரம்

இந்தியா டுடே-ஆக்சிஸ் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 33 முதல் 37 இடங்கள், பாஜக கூட்டணிக்கு 2 முதல் 4 இடங்கள், அதிமுக கூட்டணிக்கு 0 முதல் 2 இடங்கள்.

நியூஸ்18 கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 36 முதல் 39 இடங்கள், பாஜக கூட்டணிக்கு 1 முதல் 3 இடங்கள், அதிமுக கூட்டணிக்கு 0 முதல் 2 இடங்கள்.

ஏபிபி சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 37 முதல் 39 இடங்கள், பாஜக கூட்டணிக்கு 0 முதல் 2 இடங்கள், அதிமுக கூட்டணிக்கு எந்த இடமும் கிடைக்காது.

ஜன் கி பாத் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 34 முதல் 38 இடங்கள், பாஜக கூட்டணிக்கு 0 முதல் 5 இடங்கள், பிற கட்சிகளுக்கு எந்த இடமும் கிடைக்காது.

இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 22 முதல் 26 இடங்கள், பாஜக கூட்டணிக்கு 5 முதல் 7 இடங்கள், அதிமுக கூட்டணிக்கு 0 முதல் 1 இடம், பிற கட்சிகளுக்கு 8 முதல் 10 இடங்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in