ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து: பிரஷாந்த் கிஷோர்

நிதீஷ் குமாரும், தேஜஸ்வி யாதவும் பீஹாருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் இருவரும் பீஹாரைவிட்டு வெளியேற வலியுறுத்துகிறேன்
ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து: பிரஷாந்த் கிஷோர்
1 min read

பீஹார் மாநிலத்தில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தற்போது அமலில் இருக்கும் பூரண மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார் ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், பிரபல தேர்தல் வியூக ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், `அக்டோபர் 2-ல் நடைபெறவுள்ள கட்சியின் தொடக்க விழாவுக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பாகத் எதுவும் தயார் செய்யத் தேவையில்லை. கடந்த இரண்டு வருடங்களாகத் தயார் செய்து வருகிறோம். ஜன் சுராஜ் அரசாங்கம் அமைந்தால், தற்போது (பீஹாரில்) அமலில் இருக்கும் பூரண மதுவிலக்கு ஒரு மணி நேரத்தில் ரத்து செய்யப்படும்.

தேஜஸ்வி யாதவுக்கு எனது வாழ்த்துக்கள். ஒரு வழியாக அவர் வீட்டை விட்டு வெளியே வந்து மக்களிடையே செல்கிறார். நிதீஷ் குமாரும், தேஜஸ்வி யாதவும் பீஹாருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். பீஹார் மக்கள் கடந்த 30 வருடங்களாக அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் பீஹாரைவிட்டு வெளியேற வலியுறுத்துகிறேன்' என்றார் பிஷாந்த் கிஷோர்.

கடந்த 2 அக்டோபர் 2022-ல், மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி, ஜன் சுராஜ் கட்சியைத் தொடங்கினார் பிரசாந்த் கிஷோர். ஆனால் மகாத்மா காந்தியின் கொள்கைக்கு முரண்பட்ட வகையில் தன் கட்சி ஆட்சிக்கு வந்தால் பீஹாரில் அமலில் இருக்கும் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

முன்பு, `வாய்ப்பு இல்லாததால் ஒருவரால் கல்வி கற்க முடியவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஒருவரின் பெற்றோர் முதலமைச்சர்களாக இருந்துள்ளனர். ஆனால் அவரால் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியவில்லை. இது கல்வி குறித்த அவர்களின் அணுகுமுறையைக் காட்டுகிறது’ என்று பீஹார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவை மறைமுகமாக விமர்சித்திருந்தார் பிரஷாந்த் கிஷோர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in