பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை ஒட்டி அவருக்குத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
`பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களின் தலைமைப் பண்பால் நாட்டின் செழிப்பும், கவுரவமும் உயர்ந்திருக்கிறது. நீண்ட ஆயுளுடன் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், `பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் காலங்களில் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்’ என்று தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, `பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். பொது சேவையுடன் கூடிய நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்குப் பிரார்த்திக்கிறேன்’ என்று தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், `பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட ஆயுள் கிடைக்க பிரார்த்திக்கிறேன்’ என்று தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.