பிரபல ரௌடி லாரன்ஸ் பிஷ்னாய் சகோதரர் அன்மோல் பிஷ்னாய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா முழுக்கப் பிரபலமாக அறியப்படும் ரௌடி லாரன்ஸ் பிஷ்னாய். இவர் அஹமதாபாத் சிறையிலிருந்தாலும், மிகப் பெரிய அளவுக்கு ஒரு கும்பலை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவற்றின் பின்னணியில் இவருடைய சகோதரர் அன்மோல் பிஷ்னாய் இருப்பதாகக் கூறப்படுவதுண்டு.
பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கு, சல்மான் கான் வீட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு வழக்கு மற்றும் மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான தேசியவாத காங்கிரஸ் தலைவருமான பாபா சித்திக் கொலை வழக்கு போன்ற அதிமுக்கிய வழக்குகளில் அன்மோல் பிஷ்னாய் தேடப்பட்டு வருகிறார்.
இவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மும்பை குற்றப்பிரிவு காவல் துறையினர் மேற்கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில், அன்மோல் பிஷ்னாய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இந்திய அரசால் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்குகளுக்காக அவர் கைது செய்யப்படவில்லை. போலி கடவுச்சீட்டு மூலம் சட்டவிரோதமாக வந்த காரணத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இவருடையக் கைது நடவடிக்கை தொடர்பாக எஃப்பிஐ அதிகாரிகள், இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படுவாரா என்பது பற்றி வரும் நாள்களில் தெரியவரும்.