மதுபானக் கொள்கை வழக்கு: கவிதாவைக் கைது செய்த சிபிஐ

கவிதா மார்ச் 15-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
கவிதாவை கைது செய்த சிபிஐ
கவிதாவை கைது செய்த சிபிஐ@RaoKavitha

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கவிதாவை சிபிஐ கைது செய்துள்ளது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவரும், தெலங்கானா சட்டமேலவை உறுப்பினருமான கவிதா மார்ச் 15-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

தில்லி அழைத்து வரப்பட்ட இவர் மார்ச் 16-ல் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மார்ச் 23 வரை கவிதாவைக் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மார்ச் 23-ல் அமலாக்கத் துறையின் காவல் மேலும் 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதன்பிறகு, மார்ச் 26-ல் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கவிதா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கவிதாவை ஏப்ரல் 9 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து கவிதாவிடம் விசாரணை நடத்த தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த 5 அன்று, நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் கவிதாவிடம் விசாரணை நடத்திய சிபிஐ, அவரைக் கைது செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in