ராமேஸ்வரம் கஃபேவில் முதல்வர் சித்தராமையா (கோப்புப்படம்)
ராமேஸ்வரம் கஃபேவில் முதல்வர் சித்தராமையா (கோப்புப்படம்)ANI

ராமேஸ்வரம் கஃபேயில் காவல் துறையினர் விசாரணை

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில், கர்நாடக காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் விசாரணை நடத்தினர்.

ராமேஸ்வரம் கஃபே சம்பவம் தொடர்பான முழு உண்மை வெளிவர வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை கூறியதையடுத்து, விசாரணை நடைபெற்றது.

இதுதொடர்பான விசாரணையின்போது தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளைத் திறம்பட பயன்படுத்துமாறு காவல் துறை மூத்த அதிகாரிகளுக்கு அவர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் பெங்களூரு நகர போலீசார் விசாரணை நடத்தினர். மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா பரிந்துரைத்தார். அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளை அடையாளம் காணவும், அத்தகைய பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துகளை அதிகரிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், ராமேஸ்வரம் கஃபேயின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராகவேந்திர ராவ், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

logo
Kizhakku News
kizhakkunews.in