மூன்று கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய வாலிபர் கைது

மூன்று கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய வாலிபர் கைது

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கல்லூரி மாணவிகள் 3 பேர் மீது ஆசிட் வீசிய வாலிபர் கைது
Published on

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கல்லூரி மாணவிகள் 3 பேர் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்தபோது மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அமர்ந்திருந்ததாக காவலர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரளத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் 17 வயதுடையவர், அவரும் கேரளத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து தட்சிண கன்னடா காவல்துறை கண்காணிப்பாளர் சி.பி. ரிஷ்யந்த் கூறுகையில், "முக்கிய குற்றவாளியான அபின் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். ஒரு பெண்ணுக்குப் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அருகில் அமர்ந்திருந்த மற்ற இருவருக்கு லேசான தீக்காயங்கள் உள்ளன” என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in