உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவராக கபில் சிபல் தேர்வு!

கபில் சிபல், 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
கபில் சிபல்
கபில் சிபல்ANI

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் 6 பேர் போட்டியிட்டனர். இதில் கபில் சிபல் மொத்தம் 1066 வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு மூத்த வழக்கறிஞர் பிரதீப் ராயை வீழ்த்தியுள்ளார். பிரதீப் ராய் 689 வாக்குகள் பெற்றுள்ளார்.

1995-1996, 1997-1998 மற்றும் 2001-2002 ஆகிய ஆண்டுகளில் வழக்கறிஞர் சங்க தலைவராக செயல்பட்டுள்ள கபில் சிபல் 23 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in