
உங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள் என்று ராகுல் காந்தியை விமர்சனம் செய்துள்ளார் கங்கனா ரணாவத்.
அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தலைவர் மாதபி புச்சும் அவரது கணவர் தாவல் புச்சும் முதலீடு செய்துள்ளதாக கடந்த ஆகஸ்ட் 10-ல் அறிக்கை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்.
இதைத் தொடர்ந்து இது குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதலளிக்கும் வகையில், “ராகுல் காந்தி மிகவும் ஆபத்தானவர்” என்று மண்டி தொகுதியின் எம்.பி. கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரணாவத்தின் எக்ஸ் பதிவு
“ராகுல் காந்தி மிகவும் ஆபத்தானவர். அவரால் பிரதமராக முடியாத பட்சத்தில் இந்த தேசத்தை அழித்துவிட வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது.
ஹிண்டன்பர்க்கின் அறிக்கை, ராகுல் காந்தியின் ஆதரவுடன் வெளியானது. நம் தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க ராகுல் காந்தி அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்.
உங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள். நம் நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள்”
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.