2014-ல் தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது: கங்கனா ரணாவத்

”அது சனாதன சுதந்திரம், மத சுதந்திரம், சிந்திக்கும் சுதந்திரம், இந்து தேசத்தை இந்து தேசமாக ஆக்குவதற்கான சுதந்திரம்”.
கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்ANI

இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது 2014-ல் தான் என கங்கனா ரணாவத் பேசியுள்ளார்.

நடிகை கங்கனா ரணாவத் மக்களவைத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் குலு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் பங்கேற்றார். இதில், 1947-ல் மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட போது, ஏன் இந்தியா ‘இந்து தேசம்’ என அறிவிக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பினார்.

அவர் பேசியதாவது:

“நம் முன்னோர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அடிமைப் படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸின் தவறான ஆட்சியையும் பார்த்தார்கள். 2014-ல் பாஜக வெற்றி பெற்று, பிரதமர் மோடி பதவி ஏற்ற பின்னர் தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது. அது சனாதன சுதந்திரம், மத சுதந்திரம், சிந்திக்கும் சுதந்திரம், இந்து தேசத்தை இந்து தேசமாக ஆக்குவதற்கான சுதந்திரம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in