ரயில்வே துறையில் உள்ள வேலை வாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
ரயில்வே துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியாகும் நிலையில் தற்போது தொழில்நுட்பம் சாராத பிரிவில் காலியாக உள்ள 11,558 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் முதுநிலை அலுவலர் பிரிவில் நிலை அதிகாரி, சரக்கு ரயில் மேலாளர் உட்பட 8113 பணியிடங்களும், இளநிலை அலுவலர் பிரிவில் ஜுனியர் கிளார்க் உட்பட 3445 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
டிகிரி முடித்தவர்கள், +2 தேர்ச்சி பெற்றவர்கள் என இரண்டு விதமான கல்வித் தகுதிக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதுநிலை அலுவலர் பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் செப். 14 முதல் அக். 13 வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இளநிலை அலுவலர் பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் செப். 21 முதல் அக். 20 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் rrbapply.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.