பென் டிரைவ்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தத் தடை: ஜம்மு-காஷ்மீர் அரசு நடவடிக்கை | Jammu Kashmir

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சைபர் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துதல், முக்கியமான அரசாங்கத் தரவுகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பென் டிரைவ்களை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தத் தடை: ஜம்மு-காஷ்மீர் அரசு நடவடிக்கை | Jammu Kashmir
1 min read

யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் இருக்கும் அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களில் யூ.எஸ்.பி. பென் டிரைவ்கள் பயன்படுத்துவதை ஜம்மு காஷ்மீர் அரசு தடை செய்துள்ளது.

அரசாங்கத்தின் முக்கியமான தரவுகளைப் பாதுகாப்பதற்கும் தரவு மீறல் அபாயங்களைக் குறைப்பதற்கும் ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்தின் ஆணையர் செயலாளர் எம். ராஜு பிறப்பித்த அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சைபர் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

`ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சைபர் பாதுகாப்பு நிலையை மேம்படுத்துதல், முக்கியமான அரசாங்கத் தரவுகளைப் பாதுகாத்தல், தரவு மீறல்கள், வைரஸ் பாதிப்பு மற்றும் அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கான அபாயங்களைக் குறைத்தல் (ஆகியவற்றுக்காக)

ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் இருக்கும் அரசு செயலகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை ஆணையர் அலுவலகங்களிலும் அதிகாரப்பூர்வ மின்னணு சாதனங்களில் பென் டிரைவ்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது,’ என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டும் அவற்றின் பயன்பாட்டை நியாயப்படுத்தும் பட்சத்தில், அந்தந்த அரசுத் துறையின் தலைமை வழியாக தேசிய தகவல் மையத்தின் மாநில தகவல் அதிகாரிக்கு முறையான கோரிக்கை அனுப்பப்பட்டால், ஒரு துறைக்கு 2 முதல் 3 பென் டிரைவ்களின் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு, சம்மந்தப்பட்ட பென் டிரைவ்களை அங்கீகரிப்பதற்காகவும், பயன்பாட்டிற்கு முன்பான பதிவுக்காகவும், அந்தந்த தேசிய தகவல் மையத்தின் பிரிவில் அவற்றை நேரடியாக சமர்ப்பிக்கவேண்டும்.

மேலும், ஒரு பாதுகாப்பான மாற்றாக, கிளவுட் அடிப்படையிலான (https://govdrive.gov.in) Gov Drive-ஐ அரசுத் துறைகள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அரசு அதிகாரிக்கும் 50 ஜிபி அளவிற்கான பாதுகாப்பான சேமிப்பிடம் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in