ஜார்க்கண்ட்: கைம்பெண் மறுமணத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி!

கைம்பெண்கள் சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இன்றைய விழாவில்...
இன்றைய விழாவில்...ANI
1 min read

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கைம்பெண் மறுமண ஊக்குவிப்புத் திட்டத்தை அம்மாநில முதல்வர் சம்பை சோரன் இன்று முறைப்படி தொடங்கி வைத்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.

இந்தத் திட்டம் குறித்து சமூக நலத்துறை செயலாளர் மனோஜ் குமார் கூறுகையில், "நம் சமூகத்தில் கைம்பெண்கள் கௌரவமான வாழ்க்கை நடத்துவதில்லை. கைம்பெண்கள் சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. மறுமணம் செய்து கொள்ளும் எந்தப் பெண்ணும் இதற்கு விண்ணப்பிக்கலாம்; திருமணமான ஒரு வருடத்துக்குள் அவருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும்” என்றார்.

இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஏழு பேருக்குத் தலா ரூ. 2 லட்சம் என 14 லட்சம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in