ஜப்பான் நிலநடுக்கம்: உதவி எண்களை வெளியிட்டுள்ள இந்தியத் தூதரகம்

ஜப்பான் நிலநடுக்கம்: உதவி எண்களை வெளியிட்டுள்ள இந்தியத் தூதரகம்
1 min read

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியத் தூதரகம் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

வடக்கு மத்திய ஜப்பான் பகுதியில் இன்று (திங்கள்கிழமை) ரிக்டர் அளவில் 7.5 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இஷிகாவா, நிகாடா மற்றும் டோயோமா பகுதிகளுக்கு ஜப்பான் வானிலை முகமை சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

சுனாமி எச்சரிக்கை வெளியானவுடன் ஜப்பானிலுள்ள இந்தியத் தூதரகம் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளதாவது:

"நிலநடுக்கம் மற்றும் சுனாமி தொடர்பாக எவரேனும் தொடர்புகொள்ள விரும்பினால், தூதரகம் அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது. அரசு வெளியிடும் வழிகாட்டுதல்களைக் கடைபிடியுங்கள்."

அவசர உதவி எண்கள் மற்றும் மெயில் ஐடி-க்கள்:

யாகுப் டோப்னோ - +81-80-3930-1715

அஜய் சேதி - +81-70-1492-0049

டி.என். பார்ன்வால் - +81-80-3214-4734

எஸ். பாட்டாசார்யா - +81-80-6229-5382

விவேக் ராத்தீ - +81-80-3214-4722

sscons.tokyo@mea.gov.in

offfseco.tokyo@mea.gov.in

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in