மூன்று நாள்களாக ஜாம் ஜாம் என்றிருந்த ஜாம்நகர் விமான நிலையம்!

பிப்ரவரி 26 முதல் மார்ச் 3 வரை 4,500 பயணிகள் ஜாம் நகர் விமான நிலையத்துக்கு வந்துள்ளார்கள்...
மூன்று நாள்களாக ஜாம் ஜாம் என்றிருந்த ஜாம்நகர் விமான நிலையம்!
ANI
1 min read

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் ஆகியோரின் திருமணக் கொண்டாட்டத்தின் காரணமாக ஜாம்நகர் விமான நிலையத்தில் பிப்ரவரி 26 முதல் அதிக விமானப் போக்குவரத்து இருந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜாம்நகர் விமான நிலைய இயக்குநர் டி.கே.சிங் இதுகுறித்துக் கூறியதாவது:

"பிப்ரவரி 26 முதல் மார்ச் 3 வரை 4,500 பயணிகள் ஜாம் நகர் விமான நிலையத்துக்கு வந்துள்ளார்கள். 350 உள்நாட்டு மற்றும் 86 சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. 164 சர்வதேசப் பயணிகள் வந்துள்ளனர்” என்றார்.

இந்த விமான நிலையத்தில் பிப்ரவரி 26 முதல் மார்ச் 6 வரை சர்வதேச விமானங்களைக் கையாள இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளது

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆகாஷ் அம்பானி திருமணத்துக்கு முந்தைய சிறப்பு கொண்டாட்டங்களுக்காக பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், ரியானா, இவான்கா டிரம்ப் உள்பட பல பிரபலங்கள் ஜாம்நகருக்கு வந்து விழாவைச் சிறப்பித்தார்கள்.

logo
Kizhakku News
kizhakkunews.in