ஜம்மு-காஷ்மீர் முதற்கட்ட தேர்தலில் 58.85% வாக்குப்பதிவு

"கடந்த 35 ஆண்டுகளில் இது அதிகபட்ச வாக்குப்பதிவு."
ஜம்மு-காஷ்மீர் முதற்கட்ட தேர்தலில் 58.85% வாக்குப்பதிவு
ANI
1 min read

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் 58.85% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அலுவலர் பி.கே. போல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் 2014-க்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாக 7 மாவட்டங்களில் 24 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அலுவலர் பி.கே. போல் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாகக் கூறினார்.

"24 தொகுதிகளில் அதிகபட்சமாக கிஷ்ட்வாரில் 77.23 சதவீதமும் குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.03 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒட்டுமொத்தமாக முதற்கட்ட வாக்குப்பதிவில் இரவு 7.30 மணி நிலவரப்படி 58.85% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 35 ஆண்டுகளில் இது அதிகபட்ச வாக்குப்பதிவு." என்றார் பி.கே. போல்.

செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ல் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 8-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in