இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா, பாஜகவில் இணைந்து விட்டதாக, அவரது மனைவி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜடேஜாவின் மனைவி ரிவாபா, குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக உள்ள நிலையில் ஜடேஜாவும் அக்கட்சியில் இணைந்துள்ளதாக ரிவாபா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். ஜடேஜாவின் பாஜக உறுப்பினர் அட்டையின் புகைப்படத்தைப் ரிவாபா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.