சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: ரவீந்திர ஜடேஜா

பெருமையாகத் துள்ளிக் குதிக்கும் குதிரையைப் போல, எப்போதும் என் நாட்டுக்காக என்னால் முடிந்ததைச் செய்து வந்துள்ளேன். மற்ற வடிவங்களில் அதைத் தொடர்ந்து செய்வேன்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: ரவீந்திர ஜடேஜா
ANI

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்பு அறிவித்த நிலையில், இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்திய அணி. இந்த அணியில் ரவீந்திர ஜடேஜாவும் அங்கம் வகித்தார்.

`இதயம் நிறைந்த நன்றியுடன், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். பெருமையாகத் துள்ளிக் குதிக்கும் குதிரையைப் போல, எப்போதும் என் நாட்டுக்காக என்னால் முடிந்ததைச் செய்து வந்துள்ளேன். மற்ற வடிவங்களில் அதைத் தொடர்ந்து செய்வேன். டி20 உலகக் கோப்பையை வெல்லும் கனவு நனவாகியுள்ளது. இது எனது சர்வதேச டி20 வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், ஆதரவுக்கும் நன்றி’ என்று தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளார் ஜடேஜா.

74 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜடேஜா 515 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 21.45. ஸ்டிரைக் ரேட் 127.16. பந்துவீச்சில் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in