ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 26.7% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் 2014-க்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாக 24 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ல் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 8-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது.
இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளுக்கும், ஜம்மு பிராந்தியத்தில் 8 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. காலை 11 மணி நிலவரப்படி 26.7% வாக்குகள் பதிவாகியுள்ளன.