வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட புளூபேர்ட் 2 செயற்கைக்கோள்: இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு | ISRO |

அதிக எடை கொண்ட செயற்கைக் கோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி இஸ்ரோ சாதனை...
வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட இணையதள செயற்கைக்கோள்
வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட இணையதள செயற்கைக்கோள்ISRO
2 min read

அமெரிக்காவின் மிக கனமான புளூபேர்ட் 2 நவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் இஸ்ரோவின் எல்விஎம் 3 ராக்கெட் வெற்றிகரமாக நிலை நிறுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

உலகளவில் அதிவேக இணையதள சேவையை வழங்கும் வகையில் அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ் மொபைல் நிறுவனம் புளூபேர்ட் 6 என்ற செயற்கைக் கோளை உருவாக்கியுள்ளது. இதனை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, தனது கனரக ராக்கெட்டான எல்விஎம் 3 எம் 6 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.55 மணிக்கு செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று (டிச. 23) காலை தொடங்கியது. பின்னர், ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் உள்பட இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அதிக எடையுள்ள செயற்கைக்கோள்

தகவல் தொடர்புக்கான புளூபேர்ட் செயற்கைக்கோள் சுமார் 6,100 கிலோ எடை கொண்டது. இது 223 சதுர மீட்டர் பரப்பளவு உடையது. விண்வெளியில் இருந்து நேரடியாக சாதாரண ஸ்மார்ட் போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், காணொளி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும். மேலும், இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே இதுதான் அதிக எடையுள்ள செயற்கைக்கோள். இந்தச் செயற்கைக்கோள் இஸ்ரோவின் மிக கனமான ராக்கெட்டான எல்விஎம் 3 எம் 6-ன் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, தனது சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் கனமான எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏற்றிச் செல்லும் ஆற்றல் காரணமாக ‘பாகுபலி ராக்கெட்’ என்றும் அழைக்கப்படுகிறது.

பிரதமர் மோடி பாராட்டு

இதையடுத்து இஸ்ரோவின் இந்த சாதனையைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

“இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட கனமான செயற்கைக் கோளான அமெரிக்காவின் புளூபேர்ட் 2-ஐ வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்திய இஸ்ரோவின் எல்விஎம் 3 எம் 6 ராக்கெட்டின் சாதனை, இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

இது இந்தியாவின் கனரக ஏவுதள திறனை வலுப்படுத்துகிறது மற்றும் உலகளாவிய வணிக ஏவுதள சந்தையில் நமது வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இது சுயசார்பு இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் வெளிப்பாடு. இதற்காக கடினமான உழைத்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து உயர்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

The Indian Space Research Organization (ISRO) on Wednesday launched the Bluebird Block-2 spacecraft of US-based AST Space Mobile onboard its heavy-lift launch vehicle LVM3-M6, a ‘Baahubali’ rocket, in what is being seen as a milestone for the space agency’s commercial push.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in