பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு
படம்: https://twitter.com/socialepfo

பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு

2022-23-ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.15 சதவிகிதமாக இருந்தது.
Published on

பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15 சதவிகிதத்திலிருந்து, 8.25 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியில் மாற்றியமைக்கப்படும். மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்த பிறகு, வட்டி விகிதமானது அரசிதழில் இடம்பெறும். 2022-23-ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.15 சதவிகிதமாக இருந்தது. 1977-78-க்குப் பிறகு மிகவும் குறைவான வட்டி விகிதமாக இது இருந்தது. இந்த வட்டி விகிதம் 2023-24-ம் நிதியாண்டில் 8.25 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களுடைய சமூகப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவாதத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு நடவடிக்கை என மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in