இந்தியாவின் பணவீக்கம் குறைவாகவே இருந்து வருகிறது: நிர்மலா சீதாராமன்

இந்தியாவின் பணவீக்கம் குறைவாகவே இருந்து வருகிறது: நிர்மலா சீதாராமன்

கல்வி, தொழில் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
Published on

2024 - 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையை மக்களவையில் இன்று காலை (ஜூலை 23) 11 மணிக்குத் தொடங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவரது உரையின் ஒரு பகுதி பின்வருமாறு:

எங்கள் கொள்கை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கைதான் எங்களுக்குக் கிடைத்த இந்த வெற்றி. அதை நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம்.

உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை இல்லாத சூழலில் தற்போது நிலவுகிறது. கப்பல் போக்குவரத்து துறையில் தொடர்ந்து பிரச்னைகள் நிலவுகின்றன, இது பண வீக்கத்துக்கு வழிவகுக்கிறது. இந்தியாவின் பணவீக்கம் குறைவாகவே இருந்து வருகிறது, விலைவாசி கட்டுக்குள் உள்ளது

ஏழைகள், பெண்கள் இளைஞர்கள் விவசாயிகள் ஆகிய நான்கு பிரிவினரை அடிப்படையாகக் கொண்டுதான் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த 2024 பட்ஜெட்டில், விவசாயத்தில் உற்பத்தித்திறன்; வேலைவாய்ப்பு மற்றும் திறன்; மேம்பட்ட மனித வளம், சமூக நீதி; உற்பத்தி மற்றும் சேவைகள்; நகர்ப்புற வளர்ச்சி; ஆற்றல் பாதுகாப்பு; உள்கட்டமைப்பு; புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு; அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் அகிய 9 அம்சங்கள் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளன.

இந்த பட்ஜெட்டில் 4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் அளிக்கப்படும் திட்டம் அறிவிக்கப்படுகிறது. இதற்காக கல்வி, தொழில் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் விவசாயம், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புக்கான தேவைகள் இந்த பட்ஜெட்டில் பூர்த்தி செய்யப்படும்.

இந்தியாவை பொருளாதார ரீதியாக வளர்ந்த அடைந்த நாடாக உருவாக்க நீண்ட கால திட்டத்திற்கான அடிப்படைகள் அறிவிக்கப்பட உள்ளன.

logo
Kizhakku News
kizhakkunews.in