ரஷ்ய எண்ணெய் இறக்குமதி விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி! | Russia | India

எண்ணெய் கொள்முதல் மூலம் ரஷ்யாவின் போருக்கு இந்தியா நிதியளிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
ரந்தீர் ஜெய்ஸ்வால் - கோப்புப்படம்
ரந்தீர் ஜெய்ஸ்வால் - கோப்புப்படம்ANI
1 min read

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தவேண்டும் அல்லது கடுமையான வரிவிதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்காவிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்தியா ஒரு தெளிவான எதிர்ப்பு செய்தியை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் எந்த எதிர் தாக்குதலிலும் ஈடுபடாமல், இந்தியாவை `நியாயமற்ற வகையில்’ குறிவைப்பதற்காக அமெரிக்கவை கண்டித்தது. மேலும் ரஷ்யாவுடனான தங்கள் சொந்த வர்த்தக உறவுகளைத் தொடர அமெரிக்காவிடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் விருப்பம் தெரிவித்தது.

ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போருக்கு இந்தியா நிதியுதவி செய்வதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தாவிட்டால் ஆகஸ்ட் 7 முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 25% உயர்த்தி, கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

முன்னதாக, ரஷ்யாவையும் இந்தியாவையும் `இறந்தவிட்ட பொருளாதாரங்கள்’ என்று டிரம்ப் கேலி செய்தார். மேலும் அவை இரண்டும் `ஒன்றாக வீழ்ச்சியை சந்திக்கும்’ என்றும் அவர் கூறினார்.

டிரம்பின் முக்கிய ஆலோசகரான ஸ்டீபன் மில்லர், எண்ணெய் கொள்முதல் மூலம் ரஷ்யாவின் போருக்கு இந்தியா நிதியளிப்பது `ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷ்ய எண்ணெய் – மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

` (ரஷ்யா உக்ரைன்) மோதல் வெடித்த பிறகு பாரம்பரியமாக பெறப்பட்டு வந்த எண்ணெய் ஐரோப்பாவிற்கு திருப்பி விடப்பட்டதால், ரஷ்யாவிலிருந்து இந்தியா (எண்ணெயை) இறக்குமதி செய்யத் தொடங்கியது’ என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ஸ்வால் நேற்று (ஆக. 4) கூறினார்.

மேலும், உக்ரைன் போரின் ஆரம்ப காலகட்டத்தில் `இந்தியா அத்தகைய இறக்குமதிகளை மேற்கொள்ள அமெரிக்கா தீவிரமாக ஊக்குவித்தது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதால், மேற்கத்திய எதிர்பார்ப்புகளால் அல்லாமல், நாட்டின் நலனே எரிசக்தி கொள்கையை வழிநடத்தும் என்பதை ரந்தீர் ஜெய்ஸ்வால் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in