பொருளாதார வளர்ச்சி 6.5 முதல் 7% ஆக இருக்கும்: தலைமைப் பொருளாதார ஆலோசகர்

"ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும்."
பொருளாதார வளர்ச்சி 6.5 முதல் 7% ஆக இருக்கும்: தலைமைப் பொருளாதார ஆலோசகர்
1 min read

2024-25-ம் நிதியாண்டில் வேகமாக வளர்ந்து பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும் என தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2024-25-ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.5 முதல் 7.0 ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. உலக வங்கி உள்ளிட்ட உலகளாவிய நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரம் 6.6 முதல் 7.2 ஆக வளர்ச்சி காணும் என்று கணித்துள்ளன.

மத்திய அரசின் தரவுகளின்படி 2021-22-ம் நிதியாண்டில் 8.7 சதவீதம், 2022-23-ம் நிதியாண்டில் 7.2 சதவீதம், 2023-24-ம் நிதியாண்டில் 8.2 சதவீதமாக இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளன.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைப் பொருளாதார ஆலோசகர், 2022-23-ம் நிதியாண்டில் நாட்டில் தனிநபர் வருமானம் சுமார் ரூ. 2 லட்சமாக இருந்தது. இது 2046-47-ம் நிதியாண்டில் ரூ. 14.9 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

மேலும், 2024-25-ம் நிதியாண்டில் 7 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை அடைவது சாத்தியம். வளர்ச்சி குறித்து நேர்மறையான பார்வை இருந்தாலும், முன் சவால்களையும் கவனத்தில் கொண்டுள்ளோம். எனவே, பொருளாதார வளர்ச்சி 6.5 முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம் என்றார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன். ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in