தாக்குதல் அச்சுறுத்தல்: பொற்கோவிலுக்குள் வான் பாதுகாப்பு அமைப்பை நிறுவ முதல்முறையாக ஒப்புதல்!

பல ஆண்டுகளில் முதல்முறையாக பொற்கோவில் விளக்குகளை அவர்கள் அணைத்தார்கள். இதனால் டிரோன்கள் வருவதை எங்களால் பார்க்க முடிந்தது.
தாக்குதல் அச்சுறுத்தல்: பொற்கோவிலுக்குள் வான் பாதுகாப்பு அமைப்பை நிறுவ முதல்முறையாக ஒப்புதல்!
ANI
1 min read

பாகிஸ்தானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், சீக்கியர்களின் புனித தளமான பொற்கோயில் வளாகத்திற்குள் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவ பொற்கோயிலின் தலைமை கிராந்தி (சீக்கிய மத குரு) உரிய அனுமதியை வழங்கியுள்ளதாக, இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா தொடங்கியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அம்ரித்சர் நகரை நோக்கி செலுத்தி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

இது தொடர்பாக 15வது காலாட்படை பிரிவின் மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி வெளியிட்ட அறிக்கையில், `பொற்கோயிலை நோக்கி ஏவப்பட்ட அனைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும், இராணுவ வான் பாதுகாப்புப் பிரிவின் துப்பாக்கிகள் வெற்றிகரமாக இடைமறித்தன’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் லெப்டினென்ட் ஜெனரல் சுமர் இவான் டி'குன்ஹா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், `எங்கள் துப்பாக்கிகளை நிலைநிறுத்த பொற்கோயிலின் தலைமை கிராந்தி அனுமதித்ததில் மிக்க மகிழ்ச்சி. பல ஆண்டுகளில் முதல்முறையாக பொற்கோவில் விளக்குகளை அவர்கள் அணைத்தார்கள். இதனால் டிரோன்கள் வருவதை எங்களால் பார்க்க முடிந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், `அச்சுறுத்தல்கள் குறித்த சாத்தியக்கூறுகள் உள்ளதை விளக்கியவுடன் அவர்கள் புரிந்துகொண்டனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு தேசிய போர் நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க துப்பாக்கிகளைப் பயன்படுத்த அவர்கள் எங்களை அனுமதித்தனர்.

இதன் விளைவாக, துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன, பொற்கோயிலின் விளக்குகளும் அணைக்கப்பட்டன’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in