டாக்கிங் செயல்முறை வெற்றி: விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைத்த இஸ்ரோ!

இஸ்ரோவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டாக்கிங் செயல்முறை வெற்றி: விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைத்த இஸ்ரோ!
1 min read

விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை ஒன்றிணைத்து டாக்கிங் செயல்முறையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்தச் சாதனையை சாத்தியப்படுத்தும் நான்காவது நாடு எனும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

எஸ்டிஎக்ஸ்01 (சேசர்) மற்றும் எஸ்டிஎக்ஸ்02 (டார்கெட்) எனும் இரு செயற்கைக்கோள்களை இஸ்ரோ கடந்த டிசம்பர் 30 அன்று பிஎஸ்எல்வி சி60 மூலம் விண்ணில் ஏவியது. இந்த இரு செயற்கைக்கோள்களையும் விண்வெளியில் இணைக்கும் செயல்முறை டாக்கி செயல்முறை. விண்வெளியில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தை நிறுவ, நிலவில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வர, நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்த டாக்கிங் செயல்முறை என்பது அவசியமானது.

இவ்விரு செயற்கைக்கோள்களும் இஸ்ரோ முதலில் ஜனவரி 7 மற்றும் ஜனவரி 9 அன்று விண்வெளியில் இணைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்பப் பிரச்னைகள் காரணமாக இவ்விரு செயற்கைக்கோள்களும் விண்ணில் இணைக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டது. இரு செயற்கைக்கோள்களின் இடைவெளியைப் படிப்படியாகக் குறைத்து வந்த இஸ்ரோ, முதலில் 15 மீ இடைவெளியிலிருந்து 3 இடைவெளியாக சுருக்கியது. இந்த இரு செயற்கைக்கோள்களின் இணைப்பு அதாவது டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக டாக்கிங் செயல்முறையை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ள நான்காவது நாடு எனும் பெருமையை இஸ்ரோ பெற்றுள்ளது.

இஸ்ரோவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கான படிக்கல்தான் இந்த டாக்கிங் செயல்முறையின் வெற்றி என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in