இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் பயணம் ரத்து

ஸ்டாலினுக்கு பதிலாக திமுக எம்.பி டி.ஆர். பாலு பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்ANI

தில்லியில் நாளை நடைபெறவுள்ள இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து, ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், இண்டியா கூட்டணி தலைவர்கள் தில்லியில் உள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில், அவரது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவுசெய்திருந்தனர்.

இக்கூட்டத்தில் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தில்லி முதல்வர் கெஜ்ரிவால் உட்பட இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் நாளை நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலினுக்கு பதிலாக திமுக எம்.பி டி.ஆர். பாலு பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in