மைக்ரோசாஃப்ட் சிக்கல்: மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம்

சிக்கலுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதைச் சரி செய்வதற்கான அப்டேட் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தகவல்
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தொடர்பிலிருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

உலகளவில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பயனர்கள் 'Blue Screen of Death' எனும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்கள். இதனால் உலகம் முழுக்க விமான சேவை, வங்கி சேவை, பங்குச் சந்தை, ஊடக நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"இந்த சிக்கல் தொடர்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மற்றும் அதன் கூட்டாளிகளுடன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தொடர்பில் உள்ளது. இந்த சிக்கலுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இதைச் சரி செய்வதற்கான அப்டேட்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிஇஆர்டி அமைப்பு தொழில்நுட்ப அறிவுரையை வெளியிடவுள்ளது. தேசிய தகவலியல் மையத்தின் நெட்வொர்க் பாதிக்கப்படவில்லை" என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in