ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ. 50 ஆயிரமாக உயர்வு! | ICICI Bank

குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ. 50 ஆயிரமாக உயர்வு! | ICICI Bank
1 min read

ஐசிஐசிஐ வங்கியில் ஆகஸ்ட் 1 அல்லது அதற்குப் பிறகு வங்கிக் கணக்கைத் தொடங்கியவர்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி, மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருந்தால், குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையாக ரூ. 50 ஆயிரம் பராமரிக்கப்பட வேண்டும். ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறு நகரங்களில் ரூ. 5 ஆயிரமாக இருந்த குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ. 2,500-ல் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள உள்நாட்டு வங்கிகளில் குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையில் ஐசிஐசிஐ வங்கி நிர்ணயித்துள்ள தொகையே அதிகம். பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை 2020-ல் நீக்கியது.

தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி நிர்ணயம் செய்துள்ள கட்டணமும் மிகக் குறைவாகவே உள்ளது. மெட்ரோ மற்றும் நகர்ப்புற வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருந்தால், குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ. 10,000. சிறு நகரங்களில் ரூ. 5,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 2,500.

வங்கிகள் தங்களுடைய அன்றாட நிர்வாகச் செலவுகளுக்காக, வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விதிகள் விதிக்கப்படுவதுண்டு. வாடிக்கையாளர்கள் இதை மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். ஐசிஐசிஐ வங்கி குறைந்தபடச் சராசரி இருப்புத் தொகையைப் பெருமளவில் அதிகரித்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ICICI Bank | Monthly Average Minimum Balance | MAB | Minimum Balance

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in