ஒவ்வொரு வாக்கும், ஒவ்வொரு குரலும் முக்கியம்: பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் 16.86 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்)படம்: https://twitter.com/BJP4India

மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் சாதனை அளவை எட்டும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. 16.86 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். 102 மக்களவைத் தொகுதிகளில் 1.86 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது! 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியமானது!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in