"மிகப் பெரிய பணி இருக்கிறது": மதுரா பாஜக வேட்பாளர் ஹேமா மாலினி

2014, 2019 மக்களவைத் தேர்தல்களிலும் ஹேமா மாலினி மதுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஹேமா மாலினி (கோப்புப்படம்)
ஹேமா மாலினி (கோப்புப்படம்)ANI
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் நிறைய பெரிய பணிகளைச் செய்ய வேண்டியுள்ளதாக பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹேமா மாலினி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் சனிக்கிழமை வெளியானது. பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியிலிருந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். இதேபோல மதுராவிலிருந்து ஹேமா மாலினி மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

"மதுராவில் எனக்கு நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது. முதல் ஐந்து ஆண்டுகளில் நான் பல விஷயங்களைச் செய்துள்ளேன். என் இரண்டாவது பதவிக்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டேன். இது மூன்றாவது முறை, மதுராவின் நிலை மேலும் உயர நான் இப்போது மிகப் பெரிய பணியைச் செய்ய வேண்டும். என் மீது நம்பிக்கை வைத்த பிரதமர் மோடி, தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி" என்றார்.

2014, 2019 மக்களவைத் தேர்தல்களிலும் ஹேமா மாலினி மதுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in