ஹரியானா, ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி?: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு சரியாக இருக்கும்பட்சத்தில், ஜம்மு-காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹரியானா, ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி?: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது
2 min read

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்குத் திரும்புவதாக பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தலா 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஹரியானாவுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீருக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அக்டோபர் 8-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஹரியானாவில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

ஹரியானா:

ஹரியானாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக கடுமையாக முயற்சித்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வேறு முடிவுகளைத் தந்துள்ளன.

இந்தியா டுடே - சி வோட்டர்

  • பாஜக - 20 முதல் 28 இடங்கள்

  • காங்கிரஸ் கூட்டணி - 50 முதல் 58 இடங்கள்

  • ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி - 0 முதல் 2 இடங்கள்

  • இந்திய தேசிய லோக் தளம் கூட்டணி - 0

  • மற்றவை - 10 முதல் 14 இடங்கள்

பாஸ்கர் ரிப்போர்ட்டர்ஸ்

  • பாஜக - 19 முதல் 29 இடங்கள்

  • காங்கிரஸ் கூட்டணி - 44 முதல் 54 இடங்கள்

  • ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி - 0 முதல் 1 இடங்கள்

  • மற்றவை - 4 முதல் 10 இடங்கள்

ரிபப்ளிக் பாரத் மேட்ரைஸ்

  • பாஜக - 18 முதல் 24 இடங்கள்

  • காங்கிரஸ் கூட்டணி - 55 முதல் 62 இடங்கள்

  • ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி - 0 முதல் 3 இடங்கள்

  • இந்திய தேசிய லோக் தளம் கூட்டணி - 3 முதல் 6 இடங்கள்

  • மற்றவை - 2 முதல் 5 இடங்கள்

ரிபப்ளிக் டிவி - பி-மேக்

  • பாஜக - 27 முதல் 35 இடங்கள்

  • காங்கிரஸ் கூட்டணி - 51 முதல் 61 இடங்கள்

  • ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி - 0

  • இந்திய தேசிய லோக் தளம் கூட்டணி - 3 முதல் 6 இடங்கள்

ஜம்மு-காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீர் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெறும் முதல் தேர்தல் இது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல். இங்கு தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியா டுடே - சி வோட்டர்

  • பாஜக - 27 முதல் 32 இடங்கள்

  • காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி - 40 முதல் 48 இடங்கள்

  • மக்கள் ஜனநாயகக் கட்சி - 6 முதல் 12 இடங்கள்

  • மற்றவை - 6 முதல் 11 இடங்கள்

பாஸ்கர் ரிப்போர்ட்டர்ஸ்

  • பாஜக - 20 முதல் 25 இடங்கள்

  • காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி - 35 முதல் 40 இடங்கள்

  • மக்கள் ஜனநாயகக் கட்சி - 4 முதல் 7 இடங்கள்

  • மற்றவை - 12 முதல் 18 இடங்கள்

ரிபப்ளிக் பாரத் மேட்ரைஸ்

  • பாஜக - 28 முதல் 30 இடங்கள்

  • காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி - 31 முதல் 36 இடங்கள்

  • மக்கள் ஜனநாயகக் கட்சி - 5 முதல் 7 இடங்கள்

  • மற்றவை - 8 முதல் 16 இடங்கள்

ஆக்சிஸ் மை இந்தியா

  • பாஜக - 24 முதல் 34 இடங்கள்

  • காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி - 35 முதல் 45 இடங்கள்

  • மக்கள் ஜனநாயகக் கட்சி - 4 முதல் 6 இடங்கள்

  • மற்றவை - 9 முதல் 23 இடங்கள்

பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், தொங்கு சட்டப்பேரவை அமையும் பட்சத்தில் மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி பலம் வாய்ந்ததாக மாறும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in