பண மோசடி வழக்கு: ஹார்திக் பாண்டியாவின் உறவினர் கைது

ரூ. 4.3 கோடி வரை வைபவ் பாண்டியா ஏமாற்றியதாக பாண்டியா சகோதரர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
ஹார்திக் பாண்டியாவின் உறவினர் கைது
ஹார்திக் பாண்டியாவின் உறவினர் கைது@hardikpandya7

பண மோசடி வழக்கில் ஹார்திக் பாண்டியாவின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹார்திக் பாண்டியாவின் உறவினரான வைபவ் பாண்டியா கடந்த 2021-ல் ஹார்திக் மற்றும் கிருனாள் பாண்டியா ஆகியோருடன் இணைந்து ‘பாலிமர்’ என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.

இதில் ஹார்திக் மற்றும் கிருனாள் பாண்டியா ஆகியோர் தலா 40 சதவீதம் முதலீடு செய்ததாகவும், வைபவ் பாண்டியா 20 சதவீதம் முதலீடு செய்ததாகவும் தெரிகிறது. மேலும், அந்த நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் வைபவிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

நிறுவனத்தில் இருந்து வரும் பணத்தை முதலீடு செய்ததற்கு ஏற்றபடி பிரித்துக் கொள்ளலாம் என மூன்று பேரும் சேர்ந்து முடிவெடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் வைபவ் பாண்டியா ‘பாலிமர்’ நிறுவனத்தில் இருந்து வரும் பணத்தை மற்றொரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்டு சுமார் ரூ. 4.3 கோடி வரை வைபவ் பாண்டியா ஏமாற்றியதாக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையிடம் ஹார்திக் பாண்டியா சகோதரர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வைபவ் பாண்டியா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in