140 கோடி இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை ஜிஎஸ்டி உயர்த்தியுள்ளது: பிரதமர் மோடி

மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க இந்தச் சீர்திருத்தப் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதியேற்றுள்ளோம்
140 கோடி இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை ஜிஎஸ்டி உயர்த்தியுள்ளது: பிரதமர் மோடி
ANI
1 min read

ஜிஎஸ்டி வரியின் 7 வருட காலப் பயணத்தைப் பாராட்டித் தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

`இந்தச் (ஜிஎஸ்டி வரி) சீர்திருத்தங்கள் 140 கோடி இந்திய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகும். ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு வீட்டு உபயோகப் பொருட்கள் மிகவும் மலிவாகிவிட்டன. இதனால் ஏழை மற்றும் எளிய மக்களுக்குக் கணிசமான சேமிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க இந்தச் சீர்திருத்தப் பயணத்தைத் தொடர நாங்கள் உறுதியேற்றுள்ளோம்’ என ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தத்தைப் பாராட்டித் தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

முன்பு நடைமுறையில் இருந்த பல மாநில மற்றும் மத்திய வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே சீராக ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை) வரி கடந்த ஜூலை 1, 2017-ல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதால் இரட்டை வரி வதிப்பு முறை இந்தியாவில் முடிவுக்கு வந்தது. அதனால் பொதுவான தேசியச் சந்தை நாட்டில் உருவானது. பொருட்கள் மீதான விலை குறைப்பு நுகர்வோருக்கு நன்மையை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த விலை குறைப்பு காரணமாக உள்நாட்டுச் சந்தையிலும், வெளிநாட்டுச் சந்தையிலும் இந்தியத் தயாரிப்புகளுக்கான மதிப்பு உயர்ந்துள்ளது.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் கலால் வாரியத்தின் அறிக்கைப்படி, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாவு, தொலைக்காட்சிப் பெட்டி, சோப்பு, சோப்புத் தூள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.

கடந்த ஜூன் 22-ல் நடந்த 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் முடிவில் ரயில் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி முற்றிலுமாக நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி சம்மந்தப்பட்ட சில முக்கிய நிர்வாகரீதியிலான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in