அயோத்தி ராமர் கோயிலில் ஆளுநர் ஆர்.என். ரவி சாமி தரிசனம்

"ராமர் கோயில் நமது நம்பிக்கையின் அடையாளம். நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் இங்கு வந்துள்ளனர்".
அயோத்தி ராமர் கோயிலில் ஆளுநர் ஆர்.என். ரவி சாமி தரிசனம்
அயோத்தி ராமர் கோயிலில் ஆளுநர் ஆர்.என். ரவி சாமி தரிசனம்ANI

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜன. 22 அன்று நடைபெற்றது. ராமர் சிலை முன்பு சிறப்புப் பூஜைகளை செய்து பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது மனைவியுடன் அயோத்தி ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “500 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்தது. நாங்கள் சாமி தரிசனம் செய்ய இங்கு வந்துள்ளோம். ராமர் கோயில் நமது நம்பிக்கையின் அடையாளம். நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் இங்கு வந்துள்ளனர். நமது நாட்டின் வளர்ச்சிக்காக பிரார்த்தனை செய்தேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in