பாஜகவிடமிருந்து 7 நாள்களில் நாட்டுக்கு விடுதலை: ராகுல் காந்தி

சரியாக, ஒருவார காலத்தில் நாட்டை ஆளப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.
பாஜகவிடமிருந்து 7 நாள்களில் நாட்டுக்கு விடுதலை: ராகுல் காந்தி

பாஜகவிடமிருந்து இன்னும் 7 நாள்களில் நாடு விடுதலை அடையப்போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் 6 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 7-வது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெறுகிறது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சரியாக, ஒருவார காலத்தில் நாட்டை ஆளப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

இந்த நிலையில், ஜூன் 4-க்கு பிறகு பாஜக விடைபெறலாம் என ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"ஜூன் 4-க்கு பிறகு பாஜகவும், நரேந்திர மோடியும் விடைபெறலாம். இன்னும் 7 நாள்களில் பாஜகவிடமிருந்து நாடு விடுதலை பெறுகிறது. நல்ல நாள்கள் மிகமிக வேகமாக வரவுள்ளன. இண்டியா கூட்டணி அதிக வாக்குகளைப் பெறுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வகுக்கப்படவுள்ள வியூகங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள இண்டியா கூட்டணித் தலைவர்கள் ஜூன் 1-ல் தில்லியில் கூடுகிறார்கள். இந்தக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்த விவாதம் இடைபெறலாம் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி முன்னிறுத்தப்பட்டாலும், அவருக்கு இதில் உடன்பாடில்லை எனத் தெரிகிறது. எனவே, பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in