தாயின் வயிற்றில் பிறக்கவில்லை, கடவுள்தான் என்னை அனுப்பியுள்ளார்: பிரதமர் மோடி

"நான் வெறும் கருவிதான். அதனால்தான் நான் என்ன செய்தாலும், கடவுளே என்னை வழிநடத்துவதாக நான் நம்புவேன்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தான் மருத்துவ முறையில் பிறக்கவில்லை என்றும், கடவுளே தன்னை நேரடியாக அனுப்பியதாகவும் பிரதமர் மோடி கூறியது பேசுபொருளாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுக்க பயணம் செய்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஊடகங்களுக்கும் நேர்காணல் அளித்து வருகிறார். இதில் பிரதமர் பேசும் பல்வேறு விஷயங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் அளித்த நேர்காணலில், தன்னைக் கடவுள்தான் பூமிக்கு அனுப்பி வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

அவர் கூறியதாவது:

"என் அம்மா இருந்தவரை நான் மருத்துவ முறையில் (பயோலாஜிக்கலாக) பிறந்ததாகவே நம்பிக்கொண்டிருந்தேன். அம்மா மறைந்த பிறகு என் வாழ்க்கை அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போதுதான் ஒரு விஷயம் தெளிவானது. கடவுள்தான் என்னை இந்தப் பூமிக்கு நேரடியாக அனுப்பியிருக்கிறார்.

இந்தச் சக்திகள் எதுவும் ஒரு உடலிலிருந்து வரக்கூடியது அல்ல. கடவுள் அருளால் எனக்குக் கிடைக்கப்பெற்றது. கடவுள் காரணத்துடனே எனக்கு நல்ல நோக்கங்களையும், திறன்களையும் கொடுத்துள்ளதாக நான் நம்புகிறேன். நான் வெறும் கருவிதான். அதனால்தான் நான் என்ன செய்தாலும், கடவுளே என்னை வழிநடத்துவதாக நான் நம்புவேன்" என்றார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in