கௌதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவில் பிடிவாரண்ட்: விவரம் என்ன?

கௌதம் அதானி மீதான இந்தக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் அதானி குழுமப் பங்குகள் 20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

265 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய திட்டத்தில் லஞ்சம் கொடுத்தது மற்றும் மோசடி புகார் தொடர்பாக அமெரிக்காவில் தொழிலதிபர் கௌதம் அதானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு மேல் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு லாபம் ஈட்டும் வகையில் சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கௌதம் அதானி, அவருடைய உறவினர் சாகர் அதானி மற்றும் 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் கொடுத்ததை மறைத்து, அமெரிக்கா மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் கௌதம் அதானி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் படி இது விதிமீறல என்பதால் நியூயார்கில் அமெரிக்கப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டியுள்ளது. நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

2021-ல் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதானி கிரீன் நிறுவனம் 750 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்டியுள்ளது. இதில் அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து மட்டும் 175 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளது. லஞ்சத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தவறான தகவல்களைக் கொண்ட ஆவணங்களை அதானி கிரீன் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம், அமெரிக்க முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.

இந்தக் குற்றச்சாட்டில் கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கௌதம் அதானி மீதான இந்தக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் அதானி குழுமப் பங்குகள் 20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in