எங்கள் கட்சியில் எல்லா நாளும் கார்த்திகை!

மக்களவைத் தேர்தல் முடிவுகளை முன்வைத்து சமூகவலைத்தளங்களில் சுற்றிவரும் நய்யாண்டிப் பதிவு!
எங்கள் கட்சியில் எல்லா நாளும் கார்த்திகை!

இந்த மக்களவைத் தேர்தல் எல்லாவிதமான கட்சிகளுக்கும் ஏதோ ஒருவகையில் மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளித்துள்ளது. தோற்ற கட்சிகளும் நிம்மதியாக இருக்கும் ஒரு தேர்தலாக அமைந்துவிட்டது. இந்நிலையில் இதையொட்டி சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் ஒரு பதிவு.

பாஜக - தேர்தல் முடிவுகளில் எங்களுக்கு மகிழ்ச்சி, ஏனென்றால் மக்களவையில் நாங்கள்தான் தனிப்பெரும் கட்சி!

காங்கிரஸ் - தேர்தல் முடிவுகளில் எங்களுக்கு மகிழ்ச்சி, ஏனென்றால் கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் இருமடங்கு இடங்களில் வெற்றிபெற்றுள்ளோம்!

சமாஜ்வாதி - தேர்தல் முடிவுகளில் எங்களுக்கு மகிழ்ச்சி, ஏனென்றால் உத்தர பிரதேசத்தில் நாங்கள்தான் அதிக இடங்களை வென்றுள்ளோம்!

தெலுங்கு தேசம் - தேர்தல் முடிவுகளில் எங்களுக்கு மகிழ்ச்சி, ஏனென்றால் எங்கள் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்து, புதிதாக அமையப்போகும் மத்திய அரசிலும் அங்கம் வகிக்கின்றோம்!

திரிணாமூல் காங்கிரஸ் - தேர்தல் முடிவுகளில் எங்களுக்கு மகிழ்ச்சி, ஏனென்றால் மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வெற்றியைத் தடுத்துள்ளோம்!

ஐக்கிய ஜனதா தளம் - தேர்தல் முடிவுகளில் எங்களுக்கு மகிழ்ச்சி, ஏனென்றால் பீகாரில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்திய அரசில் இடம் பெறப்போகிறோம்!

திமுக - தேர்தல் முடிவுகளில் எங்களுக்கு மகிழ்ச்சி, ஏனென்றால் தமிழகத்தில் பாஜகவும் அதிமுகவும் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை!

வாக்குப்பதிவு இயந்திரம் - தேர்தல் முடிவுகளில் எங்களுக்கு மகிழ்ச்சி, ஏனென்றால் எங்களை யாரும் குறை சொல்லவில்லை!

தேர்தல் ஆணையம் - தேர்தல் முடிவுகளில் எங்களுக்கு மகிழ்ச்சி, ஏனென்றால் இனி செய்தியாளர் சந்திப்பு நடத்தவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை!

கெஜ்ரிவால் - தேர்தல் முடிவுகளில் எனக்கு மகிழ்ச்சி, ஏனென்றால் என் ரத்தத்தின் சர்க்கரை அளவு இப்போது கட்டுக்குள் உள்ளது!

பொதுமக்கள் - தேர்தல் முடிவுகளில் எங்களுக்கு மகிழ்ச்சி, ஏனென்றால் பங்குச்சந்தை வீழ்ச்சியால் குறைந்த விலைக்கு அதிக பங்குகள் வாங்கலாம்!

ஆக, அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது இந்தத் தேர்தல் முடிவுகள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in