வாக்களித்த அனைவருக்கும் நன்றி: பிரதமர் மோடி

"நாட்டு மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய அளவில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது."
பிரதமர் மோடி
பிரதமர் மோடிANI

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்றது. இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரியில் இரவு 9 மணி நிலவரப்படி 73.5% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 80.17% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் 77.57% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் எக்ஸ் தளப் பதிவு:

"முதற்கட்ட வாக்குப்பதிவின் முடிவில் நல்ல கருத்துகள் வருகின்றன. இன்றைய நாளில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நாட்டு மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய அளவில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in